அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தலபுரானம்
இறைவர் திருப்பெயர் : அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்.
இறைவியார் திருப்பெயர் : அபீதகுஜாம்பாள், உண்ணாமுலை.
தல மரம் : மகிழம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
வழிபட்டோர் : விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர்,
அகத்தியர், சனந்தனர் ஆகியோர்.
தல வரலாறு
பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.
இங்கு மலையே இறைவனின் சொரூபம்.
வல்லாள மன்னனுக்கு மகனாக வந்தவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.
தமிழகத்திலேயே உயர்ந்த கோபுரம்...
இத்திருக்கோயிலின்
கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.
தெற்கு கோபுரம் - திருமஞ்சன கோபுரம்,
மேலக்கோபுரம் - பேய்க் கோபுரம்,
வடக்குக் கோபுரம் - அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.
25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.
கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்தது |
- கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.
- கார்த்திகை தீப பெருவிழா, இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது.
- உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.
- அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.
- ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)
No comments:
Post a Comment